அமெரிக்க பள்ளியில் திடீர் துப்பாக்கிச்சூடு! – 14 குழந்தைகள் பலி!

Webdunia
புதன், 25 மே 2022 (08:26 IST)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சிறு குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகமாக உள்ள நிலையில் ஆங்காங்கே அடிக்கடி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து வருவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாசில் உவால்டே பகுதியில் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது.

இங்கு வழங்கம்போல மாணவர்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென பள்ளிக்குள் புகுந்த 18 வயதுடைய நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 14 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் பல மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய நபர் மீது அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் அவர் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் உவால்டே பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்