அந்த வகையில் நாளை 14வது தடுப்பூசி மையம் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட உள்ளது. தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இந்த முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் 1,600 முகாம்கள் நடத்தப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
நேற்று வரை 7,24,30,000 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்னும் ஒரு கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியும் 80 லட்சம் பேர் 2-வது தவணையும் போடாமல் உள்ளனர். மேலும் இந்த தடுப்பூசி முகாம் இரண்டாவது டோஸ் போடுபவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.