ரூ.30,000 கோடி கூகுளுக்கு அபராதம்.. ரத்து செய்யாவிட்டால் நடவடிக்கை என டிரம்ப் எச்சரிக்கை..!

Mahendran

சனி, 6 செப்டம்பர் 2025 (15:01 IST)
கூகுளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த ரூ.30,000 கோடி அபராதம் குறித்து டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த அபராதம் விளம்பர தொழில்நுட்ப சந்தையில், பயனர்களின் தரவுகளை கூகுள் தவறாப் பயன்படுத்தியதாக எழுந்த புகார்களை தொடர்ந்து விதிக்கப்பட்டது. 
 
விளம்பர தொழில்நுட்ப சந்தையில் கூகுள், அதன் பயனர்களின் தரவுகளை தவறாக பயன்படுத்தியதாக ஐரோப்பிய ஒன்றியத்தில் புகார் எழுந்தது. இதன் விளைவாக, ஐரோப்பிய ஒன்றியம் கூகுளுக்கு ரூ.30,000 கோடி அபராதம் விதித்தது.  
 
இந்த அபராதத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட இத்தகைய நியாயமற்ற அபராதங்களை ரத்து செய்ய வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தியுள்ளார். 
 
அப்படி செய்யாவிட்டால், அமெரிக்கா பதில் நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரம் சர்வதேச வர்த்தக உறவுகளில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்