டுவிட்டரில் உலக அளவில் டிரெண்ட் ஆன 'GO BACK MODI' ஹேஷ்டாக்

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (16:24 IST)
பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டங்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு நாட்டின் பிரதமர் அந்த நாட்டின் மாநிலம் ஒன்றுக்கே செல்ல முடியாத வகையில் போராட்டங்கள் நடைபெறுவதை உலக நாடுகள் உற்று நோக்கியுள்ளன
 
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், திரையுலகினர்களும் இன்று காலை முதல் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தின. குறிப்பாக #GOBACKMODI'  என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் பல மணி நேரங்களாக உலக அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் மோடிக்கு எதிராக போராட்டம் ஏன்? என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். 
 
இந்த கேள்விகளுக்கு தமிழர்கள் விளக்கமாக பதில் அளித்து வருகின்றனர். தமிழர்களின் நியாயமான கோரிக்கையை புரிந்து கொண்ட பல வெளிநாட்டினர் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தியதால் உலக டிரெண்டிங்கில் பலமணிநேரமாக இந்த ஹேஷ்டேக் உள்ளது. பாகிஸ்தானுக்கே தைரியமாக சென்று வந்த பிரதமர் மோடி, இன்னும் தமிழ்நாட்டுக்கு வருவதென்றால் யோசித்துதான்  வரவேண்டும் என்று பலர் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்