விஜய் சேதுபதி.. உன்னை தேடி நான் வருவேன் : வெளிநாட்டுப் பெண்ணின் ஏக்கம் (வீடியோ)

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (09:51 IST)
தமிழ் நடிகர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பதை ஒரு ஐரோப்பிய பெண் மீண்டும் நிரூபித்துள்ளார்.


 

 
சமீபத்தில் ஒரு வீடியோ வெளியானது. அதில் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் பெண் பேசுகிறார். கையில் ஒரு மொபைல் போன் இருக்கிறது. அதில் நடிகர் விஜய் சேதுபதியின் புகைப்படம் இருக்கிறது. அதைப் பார்த்து பார்த்து அவர் உருகி உருகி பேசுகிறார். 
 
அவர் கூறும்போது “ விஜய் சேதுபதியை நான் மிகவும் நேசிக்கிறேன். விஜய் சேதுபதி.. உன்னுடைய கண், முகம், சிரிப்பு அனைத்தையும் நான் மிகவும் நேசிக்கிறேன். நீ ஒரு ஹேண்ட்சம்.  அவரை(விஜய் சேதுபதி) ஒரு நாள் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் நடித்த எல்லா திரைப்படங்களையும் நான் பார்த்துள்ளேன். 
 
அவர் ஒரு மிகச்சிறந்த நடிகர். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்று கேள்விப்பட்டதும் நான் மிகுந்த வருத்தம் அடைந்தேன். நான் அவரின் தீவிரமான ரசிகை. அவர் நடித்த பீசா திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும். 
 
விஜய் சேதுபதி.. உன்னை சந்திக்க ஒரு நாள் நிச்சயம் நான் வருவேன். உன் படங்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று உருகுகிறார்.
 
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
 
அடுத்த கட்டுரையில்