பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேக்கம்!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (09:27 IST)
காவிரி நீர் பிரச்னையால், கர்நாடகத்தில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன, மேலும் தமிழர்களும் தாக்கப்பட்டனர். அவர்களின் உடைமைகளும் அடித்து நெருக்கப்பட்டன.


 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக லாரிகள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஆசியாவின் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு மார்க்கெட் இன்று வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும், இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் தேக்கமடைந்துள்ளது. மேலும், மார்க்கெட்டிற்கு காய்கறி கொண்டு வரும் லாரிகள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்