எனக்கும் ஆசைகள் இருக்கு: பேய் மனிதன் பேட்டி!!

Webdunia
வியாழன், 25 மே 2017 (11:25 IST)
பிலிப்பைன்சில் வாழ்ந்து வரும் இளைஞருக்கு அரிய வகை தோல் நோய் இருப்பதால் அவர் தீய ஆவி, பேய் மனிதன் என்று அழைக்கப்படுகிறார்.


 
 
இந்த இளைஞருக்கு பிறக்கும் போதே ichthyosis என்ற நோய் இருந்துள்ளது. இதனால் அவரது தோல்கள் தடித்தும், வெடித்தும் மற்றும் எரிந்த நிலையில் இருப்பது போன்று காணப்படும். 
 
இவர் பொழுது போக்கிற்காக அங்குள்ள மார்க்கெட்டுகள் மற்றும் தேவலாயங்கள் போன்ற இடங்களுக்கு சென்று வருகிறார். ஆனால், இவரை பார்க்கும் மக்கள் பேய் மனிதன் என்றும் தீய ஆவி என்றும் கூறுவதால் சங்கட்டமான சூழ்நிலை ஏற்பட்டு இப்பொழுது வீட்டை விட்டு வெளியே வருவதேயில்லையாம்.
 
இது குறித்து அவர் கூறியதாவது, எனக்கு எலக்டீரிசியன் ஆக வேண்டும் என்பது ஆசை. நான் ஒரு மனிதன், எனக்கும் ஆசைகள் இருக்கும், இதை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள் என்று உருக்கமாக கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்