தடையை விலக்கியது ஜெர்மனி: இனி இந்தியர்கள் செல்லலாம்!

செவ்வாய், 6 ஜூலை 2021 (22:00 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளில் இந்தியர்கள் தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க வில்லை என்பதும் குறிப்பாக அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் அரபு நாடுகள் ஆகியவை இந்தியா இந்தியர்கள் தங்கள் ஆட்சிக்கு வர தடை விதித்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது என்பதும் நாளொன்றுக்கு நான்கு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது 40 ஆயிரம் பேருக்கும் குறைவாகவே பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து ஜெர்மனி வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிக்கொள்வதாக அறிவித்தது அந்நாட்டு அரசு!
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்