கொரோனாவால் பாதிக்கப்பட்ட 15 மாவட்டங்கள்

செவ்வாய், 6 ஜூலை 2021 (18:27 IST)
தமிழகத்தில் 15 மாவட்டங்கள்  கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறைச் செயலர் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு இந்தியாவில் கொரொனா வைரஸ் தொற்றுப் பரவியது.. தற்போது நாட்டில் கொரொனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வந்த நிலையில் மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததால் தற்போது பலி எண்ணிக்கையும், பாதிப்பு எண்ணிக்கையில் கணிசமாகக் குறைந்துள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் கூறியுள்ளதாவது:  நம் நாட்டில் தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, உள்ளிட்ட 14  மாநிலங்களில் உள்ள 90 மாவட்டங்களில்தான்  80%  கொரொனா தொற்றுப் பதிவாகியுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து இதுவரை குணமடைந்தோர் விகிதம் 97.2% மாக இருக்கிறது. மேலும் இத்தொற்றில் 45% பேர்  முறையாக முகக்கவசம் அணிவதில்லை என்றும்,  63%  பேர் தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதில்லை என்றும், 25% பேர் கொரொனா தடுப்பு விழிப்புணர்வைக் கடைப்பிடிப்பதில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தற்போது கொரோனா தொற்றுக் குறைந்துவரும் நிலையில் அனைவரும் சமூக இடைவளியைப் பின்பற்றினால் 3 வது அலையை எதிர்கொள்ள முடியும் என பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்