காந்தி உருவப்படத்தை செருப்பில் அச்சிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய அமேசான்

Webdunia
ஞாயிறு, 15 ஜனவரி 2017 (13:18 IST)
இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதால் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை"  என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது.

 
ஆன்லைன் மூலம் பொருட்களை விற்கும் நிறுவனங்களில் அமேசான் நிறுவனமும் ஒன்று. ஆனால் இந்த அமேசான் நிறுவனம்  தொடர்ந்து இந்தியாவை அவமதித்து வருகிறது. இந்திய தேசிய கொடி வண்ணத்தில் செருப்பு, தேசிய கொடி வண்ணத்தில் ஷூ விற்பனைக்கு வைத்து இந்தியாவை அவமானப்படுத்தியது கனடா நாட்டிற்கான அமேசான் இணையதளம்.

 
இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  சுஸ்மா சுவராஜ் கனடாவை கண்டித்தார். 
 
இதை தொடர்ந்து தற்போது மீண்டும் காந்தியின் படத்தை செருப்பில் பிரிண்ட் செய்து விற்பனைக்கு வைத்துள்ளது. அமேசான்  செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே மேலும் ஒரு பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவே போற்றி புகழும்  மகாத்மா காந்தியின் படத்தை செருப்பில் அச்சிட்டு gandhi Flip Flops என்ற பெயரில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்