பிரான்ஸில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்துவதற்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் பிரான்ஸ் நாடு இதுவரை கொரோனாவின் மூன்று அலைகளை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் நான்காம் அலை பரவும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் பிரான்சில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அடிக்கடி ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் இயல்பு வாழ்க்கையும், சுதந்திரமும் பறிக்கப்படுவதாக கொதித்தெழுந்துள்ள பிரான்ஸ் மக்கள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.