தொடங்கியது கொரோனா இரண்டாவது அலை! – பிரான்ஸில் மீண்டும் முழுமுடக்கம்!

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (11:05 IST)
உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பிரான்ஸில் இரண்டாம் அலை பரவல் தொடங்கியுள்ளதால் மீண்டும் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு டிசம்பர் முதலாக கொரோனா பரவ தொடங்கிய நிலையில் மார்ச் மாதம் முதலாக உலகம் முழுவதும் பல நாடுகளில் பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது. இதனால் பொதுமக்களும், பொருளாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மீண்டும் பல நாடுகளில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டை மீறி மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பிரான்ஸ் கொரோனா காரணமாக கடும் கட்டுப்பாட்டுடன் கூடிய முழுமுடக்கத்தை அறிவித்துள்ளது. இதனால் பிரான்ஸ் சுற்றுலா தளங்கள் மூடப்பட்டு, மக்களும் வீடுகளுக்கு முடங்கியுள்ளனர்.. இந்த இரண்டாம் அலை காரணமாக மேலும் பல நாடுகள் முழு முடக்கத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்