200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!

Siva

திங்கள், 3 ஜூன் 2024 (14:54 IST)
மெக்சிகோ நாட்டில் 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து நாட்டு மக்கள் அதனை கொண்டாடி வருகின்றனர் 
 
மெக்சிகோ நாட்டில் ஜூன் இரண்டாம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் இதில் இடதுசாரி கட்சியான மொரேனா கட்சி சார்பில் கிளாடியா ஷீன்பாம் போட்டியிட்டார். இந்த தேர்தலில் அவர் சுமார் 60 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
இதனையடுத்து : 61 வயதான கிளாடியா ஷீன்பாம் வரும் டிசம்பர் மாதம் அதிபராக பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது. ஏற்கனவே மெக்சிகோ நகர மேயாராக பணியாற்றியுள்ள கிளாடியா ஷீன்பாம் காலநிலை விஞ்ஞானி மற்றும் மெக்சிகோ தேச அரசியலில் அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தனது வெற்றி குறித்து  கிளாடியா ஷீன்பாம் கூறியபோது, ‘நான் மெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபர் ஆவதில் எனக்கு மட்டுமல்ல  நம் அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகும். தாய்மார்களுக்கான வெற்றி. இதன் மூலம் மெக்சிகோ ஜனநாயக நாடு என்பதை நாம் நிரூபித்துள்ளோம்’ என கூறியுள்ளார்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்