ஈரான் நாட்டின் சட்டத்தின் படி அந்நாட்டின் அதிபர் உயிரிழந்தால் அடுத்த ஐம்பது நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதியாகும். அந்த வகையில் ஈரான் அதிபர் இப்ராஹீம் ரைசி நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் அடுத்த ஐம்பது நாட்களில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற நிலையில் தேர்தலை நடத்த இடைக்கால அதிபர் முகமது முக்பர் ஆலோசனை செய்து வருகிறார்.