சிட்னி நகரில் தீ விபத்து… கட்டிடம் இழுந்து விழுந்ததால் பரபரப்பு

வியாழன், 25 மே 2023 (19:27 IST)
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 7 மாடி கட்டிடத்தில் இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டில் பிரதமர் ஆண்டனி ஆல்பனிஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள சிட்னி நகரில் 7 மாடி கட்டிடம்   ஒன்று இருக்கிறது. இந்தக் கட்டிடத்தில் இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இதில் கட்டிடம் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் சிறிது நேரத்திலேயே அக்கட்டிடம் இடிந்து விழுந்தது. மேலும் அக்கட்டிடத்தின் மேற்சுவரும் இடிந்து தெருவில் விழுந்தது.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அப்பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 100 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள்,  அக்கட்டிடத்தில் பற்றி எரிந்த தீயை அணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்