இந்தியா பாகிஸ்தான் போட்டிக்காக இந்திய பிரதமர் மோடியை சந்தித்து வேண்டுகோள் விடுக்க தயார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கடந்த பல ஆண்டுகளாக இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் நடைபெறவில்லை. உலக கோப்பை போட்டிகள் தவிர வேறு எந்த போட்டிகளும் இரு நாடுகளுக்கு இடையே நடைபெறாத நிலையில் இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாஹித் அப்ரிடி பேட்டி அளித்துள்ளார்.