காதலர் தினத்திற்கு முன் வரும் 'கட்டிப்பிடி தினம்': இளசுகள் கொண்டாட்டம்

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (08:36 IST)
நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று அதாவது பிப்ரவரி 12 அன்று உலகம் முழுவதும் கட்டிப்பிடி தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து டுவிட்டரில் இதுகுறித்த ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது.

ஒருவர் மீது ஒருவர் அன்பை வெளிப்படுத்தும் விதமாக கட்டி அணைத்தலால் இருவரும் இதயமும் இணைந்து இனம்புரியாத அன்பு வெளிப்படும் என்பது காலகாலமாக உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கமாக உள்ளது.

இந்த கட்டிப்பிடி வைத்தியத்தால் சுரக்கும் ஹார்மோன்கள், இருவரையும் நீண்ட நேரத்திற்கு உற்சாகமாக வைத்துக் கொள்ளும் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்ட உண்மை. தமிழகத்தில் கமல்ஹாசனின் 'வசூல்ராஜா எம்பிபிஎஸ் மூலம் அறிமுகமான இந்த கட்டிப்பிடி வைத்தியம் இன்னும் பிரபலமாக இன்றைய தினம் அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது

இன்று கட்டிப்பிடி தினத்தை முன்னிட்டு காதலர்கள், நண்பர்கள், கணவன் மனைவிகள், தோழிகள், சகோதர சகோதரிகள் ஆகியோர்கள் கட்டிப்பிடித்தவாறு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்