பேஸ்புக் ஓனருக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள் ! அணிதிரண்ட முதலீட்டாளர்கள்...

Webdunia
திங்கள், 19 நவம்பர் 2018 (20:25 IST)
உலகின் மிக அதிக மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு சமூக வலைதளம் பேஸ்புக். இதன் நிறுவனர் மார்க் ஜூபெர்க் ஆவார். தற்போது அவருக்கு எதிராக பேஸ்புக் முதலீட்டாளர்கள் சிலர் காய் நகர்த்தி வருவதாக செய்திகள் வெளியாகின்றன.
ஏனெனில் பேஸ்புக் நிறுவனத்தின் சி.இ.ஓ.பற்றும் சேர்மன் ஆகிய இரட்டைப் பதவியில் இருக்கிறார் மார்க். எனவே இவர் எதாவது ஒரு பதவியில் மட்டுமே இருக்க வேண்டுமென சக முதலீட்டாளர்  அவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்களாம்.
 
அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களாக பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன.
 
இந்நிலையில் நிறுவனத்தின் பங்கி வீழ்ச்சியானது முதலீட்டாளர்களுக்கு கடும் சங்கடத்தையும் நஷ்டத்தையுமே ஏற்படுத்தும்.
 
அதனால் மார்க் இத்தனை சவால்களை எப்படி சமாளிக்கப் போகிறார் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்