குப்பை குவியல் சரிந்து 60 பேர் மரணம்

Webdunia
திங்கள், 13 மார்ச் 2017 (21:54 IST)
எத்தியோப்பியா நாட்டில் குப்பை குவியல் சரிந்ததில் 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
எத்தியோப்பியாவின் தலைநகரமான அட்டிஸ் அபபா என்னும் நகரத்திற்கு வெளியே இருக்கும் குப்பைகள் கொட்டும் இடத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகள் கடந்த சனிக்கிழமை இரவு சரிந்து 60க்கும் ஏற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 
 
அந்நாட்டில் குப்பைகள் மற்றும் கழிவுகள் மேலாண்மைக்காக தனியாக தொழிற்சாலை ஒன்றை நிறுவிவருகிறது. இந்நிலையில் குப்பை குவியல் சரிந்து பலர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
 
மேலும் நகரத்தின் மொத்த குப்பைகளும் கொட்டப்படும் இடத்தில் ஏழை மக்கள் பலர் குடிசைகள் மற்றும் கூடாரங்கள் அமைத்து வசித்துவருகின்றனர். குப்பை குவியல் திடீரென மொத்தமாக சரிந்ததால் பல குடிசைகள் மற்றும் கூடாரங்கள் குப்பை குவியலில் சிக்கிக்கொண்டது. இதில் கிட்டதட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். 
 
இது குறித்து அரசு தரப்பில், விபத்து நடந்த இடத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பலர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், குப்பை குவியலில் சிக்கியிருப்பவர்களை மீட்க்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்