செல்போன் தயாரிப்பில் கவனம் செலுத்தும் எலான்மஸ்க்

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (22:53 IST)
உலகப் பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பவர் எலான் மஸ்க். இவர் மின்சாரத்தினால் இயங்கும் கார்களைத் தயாரிக்கும் டெஸ்லான் என்ற நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

மேலும், விண்வெளிப் பயணத்திலும் இவரது நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் எலான்  மஸ்கின் டெஸ்லா நிறுவனம்  டெஸ்லா பை என்ற செல்போனை அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தகவல் தெரிகிறது.  குறிப்பாக எலான் மஸ்க்கின் சேட்டிலைட் பிராண்ட்பேண்ட் நிறுவனமான ஸ்டார்லிங்க் உடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் வசதியுள்ளதாகத் தெரிவித்தார்.  இதன் மூலம் செல்போனில் இணையதள வசதியை ஏற்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்