உணவில் எலியின் கண்கள்: இளைஞருக்கு நேர்ந்த பகீர் அனுபவம்!

திங்கள், 3 ஜனவரி 2022 (15:02 IST)
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வாங்கிய உணவுப் பொருளில் செத்த எலியே இருந்துள்ளது.

 
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் ஜூவான் ஜோஸ் இவர் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து உணவுப் பொருள்களை வாங்கி வந்துள்ளார் வாங்கிய பொருட்களை பின் சமைத்து சாப்பிடும்போது உணவுப் பொருள் இல்லாமல் ஏதோ ஒன்று போல் இருந்துள்ளது.
 
உடனே அவர் தான் சாப்பிட்ட உணவுப் பொருளை சோதிக்கும் போது அதில் இரண்டு கண்கள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது போல இருந்தது. அதனால் அவர் மிகவும் அதிர்ச்சியானார்.  அவர் சாப்பிட்ட உணவில் உயிரிழந்த ஓர் எலி உள்ளது என அறிந்திருக்கிறார். இது குறித்து புகார் அளித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்