சர்வதேச அளவில் தலைமை பொறுப்புகளில் இந்தியர்கள்.. ட்விட்டரில் ஆச்சரியத்தை தெரிவித்த எலான் மஸ்க்..!

திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (08:33 IST)
சர்வதேச அளவில் இந்தியர்கள்  தலைமை பொறுப்புகளில் இருப்பதை பார்த்து ஆச்சரியமடைகிறேன் என்று ட்விட்டர் பக்கத்தில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.  
 
சர்வதேச நிறுவனங்களான கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சத்ய நாதெள்ளா, யூடியூப் நிறுவனத்தில் நீல் மோகன், அடோப் நிறுவனத்தில் சாந்தனு நாரயண் ஆகியோ தலைமைச் செயல் அதிகாரிகளாக உள்ளனர். அதேபோல் உலக வங்கிக்கு அஜய் பங்கா தலைவராக உள்ளார். ஸ்டார்பக்ஸ் (லக்‌ஷமன் நரசிமன்), காக்னிசன்ட் (ரவி குமார்), மைக்ரான் டெக்னாலஜி (சஞ்சய் மஹோத்ரா), சேனல் (லீனாநாயர்) உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமைச் செயல் அதிகாரிகளாக உள்ளனர். இதுகுறித்து எலான் மஸ்க் தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
 
இந்த நிலையில் அடுத்த ஆண்டு இந்தியா வர எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தெரிவித்துள்ளார்.  கடந்த ஜூன் மாதம் இந்தியா வந்த எலான் மஸ்க் பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களை சந்தித்தார். இந்த நிலையில் மீண்டும் அவர் இந்தியா வரஇருப்பதாகவும்  அப்போது அவர் இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து ஆய்வு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்