டெஸ்லாவின் 2.20 கோடி பங்குகள் விற்பனை செய்த எலான் மஸ்க் : என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (12:04 IST)
டெஸ்லா நிறுவனத்தின் 2.20 லட்சம் பங்குகளை தொழிலதிபர் எலான் மஸ்க் விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி இந்த ஆண்டில் மட்டும் அவர் 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை மொத்த விற்பனை செய்ததாக கூறப்படுகிறது
 
சமீபத்தில் 44 பில்லியன் டாலர் கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கியதை அடுத்து அடுத்தடுத்து அவர் தனது டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது
 
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் பட்டியலில் இருந்த எலான் மஸ்க் தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்