8 டாலருக்கு காபி குடிக்கிறப்போ இனிச்சுதா? – எலான் மஸ்க் ட்வீட் போட்டு கலாய்!

வியாழன், 3 நவம்பர் 2022 (08:40 IST)
ட்விட்டரில் ப்ளூ டிக்கிற்கு எலான் மஸ்க் கட்டணம் நிர்ணயித்துள்ளது விமர்சனத்திற்குள்ளான நிலையில் விமர்சனம் செய்பவர்களை கலாய்த்து ட்வீட் போட்டுள்ளார் எலான் மஸ்க்.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை உலக பில்லியனர் எலான் மஸ்க் வாங்கியது முதலாக அவரது செயல்பாடுகள் உலக அளவில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. ட்விட்டரை வாங்கியதும் அதன் முக்கிய பொறுப்பு அதிகாரிகளை பணியை விட்டு தூக்கிய எலான் மஸ்க், இனி ட்விட்டரில் ப்ளூடிக் பெறுவதற்கு மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் 650 ரூபாய்) கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளார்.

ALSO READ: வேலைய காட்டிட்டாங்க.. தென்கொரியாவில் விழுந்த ஏவுகணை! – வடகொரியாவுக்கு பதிலடி!

அவரது இந்த அறிவிப்புக்கு எதிராக ட்விட்டரிலேயே பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. ட்விட்டர் பயனாளர்கள் பலர் வேறு சமூக வலைதளங்களுக்கு மாற தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ப்ளூடிக் கட்டணத்தை விமர்சிப்பவர்களை கிண்டல் செய்யும் விதமாக மீம் ஒன்றை எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.



அதில் 8 டாலருக்கு ஸ்டார்பக்ஸ் காபி வாங்கும்போது சிரிப்பதாகவும், ப்ளூடிக்கிற்கு 8 டாலர் தருவதற்கு அழுவதாகவும் அவர் குறியீடாக காட்டியுள்ளார். அதிலும் உள்ளே புகுந்து கமெண்டில் அவரை பலர் விமர்சித்து வருகின்றனர்.

Edited By Prasanth.K

pic.twitter.com/kGncG7Hs3M

— Elon Musk (@elonmusk) November 2, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்