பாதி ஊழியர்கள் பணிநீக்கம்? எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி!

வெள்ளி, 4 நவம்பர் 2022 (11:11 IST)
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில் அதன் பணியாளர்களில் பாதி பேரை பணிநீக்கம் செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபலமான ட்விட்டர் நிறுவனத்தை உலக பில்லியனரான எலான் மஸ்க் வாங்கியது முதலாக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதலில் ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிய எலான் மஸ்க், பின்னர் ட்விட்டர் ஆலோசனை குழுவையும் கலைத்தார்.

தற்போது ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 50 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளாராம் எலான் மஸ்க். இதற்கான பணிநீக்க பட்டியல் தயாராகியுள்ளதாகவும், பணி நீக்கம் செய்யப்பட உள்ளவர்களுக்கு இமெயில் மெமோ இன்று அனுப்பப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இன்று அனைத்து ட்விட்டர் அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Edited By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்