ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடைபெற்ற இந்த ராணுவ நடவடிக்கைகள், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இரண்டு வாரங்களுக்குள் நடந்துள்ளன. ராணுவ நடவடிக்கைகளால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதட்டம் அதிகரித்துள்ளது.
இதன் தாக்கம் அந்நிய செலாவணி சந்தையிலும் தெரிந்தது. வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனையில் இந்திய ரூபாய் இன்று 84.65 என்ற அளவில் தொடங்கியது. வர்த்தகத்தின் போது 84.47 என்ற உயரத்தையும், 84.93 என்ற தாழ்வையும் தொடந்தது. இறுதியில், 45 காசுகள் வீழ்ச்சியுடன் ரூ.84.80 என்ற நிலையில் முடிந்தது.