நோயாளியின் கல்லீரலில் இனிஷியலை பொறித்த மருத்துவர்! அதிர்ச்சி தகவல்!

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (11:12 IST)
இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர் தன்னிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் கல்லீரலில் தனது இனிஷியலை பொறித்து அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருபவர் பிரம்ஹால். இவரிடம் பல நோயாளிகள் கல்லீரல் அறுவை சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் அவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவரை மற்றொரு மருத்துவர் பரிசோதனை செய்த போது அவரின் கல்லீரலில் ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனால் முன்னர் சிகிச்சை அளித்த பிரம்ஹாலை அழைத்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணை செய்துள்ளது. அப்போது அவர் இதுபோல மேலும் ஒரு நோயளியின் கல்லீரலில் இனிஷியலை எழுதியதை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவரின் மீது வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் அவரின் மருத்துவ அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்