சீனாவில் நிலநடுக்கம்:11 பேர் பலி

செவ்வாய், 18 ஜூன் 2019 (11:40 IST)
சீனாவில் சிக்குவான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். 122 பேர் படுகாயம் அடைந்தனர்.

சீனாவில் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது சிக்குவான் மாகாணம். அந்த பகுதியில் திடீரென்று நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

பூமியின் மையப்புள்ளியிலிருந்து 16 கி.மி. ஆழத்தில் தோன்றிய இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் 11 பேர் உயிரிழந்ததாகவும் 112 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவசர கால நடவடிக்கையாக அந்நாட்டின் மீட்பு குழுவினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிக்குவான் மாகாணத்தின் பல பகுதிகளில் குடியிறுப்பு பகுதிகள் சேதமடைந்துள்ளதால் பொது மக்கள் பலர் வீடுகளில் தங்கமுடியாமல் வீதிகளில் குடியிருக்கின்றனர்.

ஆதலால், அந்நாட்டின் தேசிய உணவு மற்றும் பாதுகாப்பு துறை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 கூடாரங்களையும், 10,000 படுக்கை விரிப்புகளையும் 20,000 போர்வைகளையும் வழங்கியுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு, இதே சிக்குவான் மாகாணத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால், 90,000 பேர் பலியானர்கள். மேலும் 1976 ஆம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட பூகம்பத்தால் 250,000 பேர் உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்