வைர கற்கள் பதிக்கப்பட்ட செருப்பு : அம்மாடியோவ் !! எத்தனை கோடி தெரியுமா ...?

திங்கள், 17 டிசம்பர் 2018 (16:09 IST)
எண்ணெய் வயல் நாடுகளை கொண்ட  ஐக்கிய அமீரகம் என்ற அரேபிய நாடுகள் பாலைவனத்தால் சூழப்பட்டிருந்தாலும் கூட அவர்களின் ஏகபோக செல்வத்திற்கும் செலவிற்கும் குறையே இருக்காது.
அந்த வகையில் உலகின் மிக உயர்ந்த  கட்டிடமான புஜ்கலிபாவை கட்டிய பெருமையில் திளைக்கும் துபாய் நாட்டில் தற்போது இன்னொரு ஆச்சர்யம் நடந்திருக்கிறது.
 
ஆம்! துபாயில் பிரசித்தி பெற்ற புர்ஜ் கோபுரத்தில் உள்ள அரங்கில் தான் இந்த ஆச்சர்யம் அரங்கேறியுள்ளது. அதுஎன்னவென்றால், வெள்ளைத்தங்கத்தில் இழைக்கப்பட்டு, 100 கேரட் வைரக்கற்கள் பதித்த  ரூ.100 கோடி  மதிப்பிலான பெண்கள் காலனி அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பிரபல கோடீஸ்வர்கள் பங்கேற்க இருக்கும் இதன் விற்பனையில் பலத்த போட்டி இருக்கும் என்று இந்தக் காலனியை தயாரித்த நிறுவனம் கூறியுள்ளது.
 
ஒருவேளை சோற்றுக்கு அல்லல் படும் உலகின் தான் இது போன்ற ஆடம்பர வெட்டிச் செலவுகளும் பணக்கார விளையாட்டுகளும்,கௌரவத்திற்காக கோடிகளை இறைகின்ற ஏலம் எனும் அவலங்களும் நடப்பதாக  மக்களிடமிருந்து விமர்சனங்கள் கிளம்புகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்