புற்றுநோய் சர்ச்சை - பங்குசந்தையில் இறங்குமுகத்தில் பேபி பவுடர் நிறுவனம்!

திங்கள், 17 டிசம்பர் 2018 (08:27 IST)
ஜான்சன் & ஜான்சன் கம்பெனிப் பொருட்களில் புற்றுநோயை உருவாக்கும் கல்நார் கலப்பதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டால் பங்குச் சந்தையில் அதன் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றன.

ஜான்சன் & ஜான்சன் கம்பெனி அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயார் செய்யும் கம்பெனி. கிட்டத்தட்ட 130 ஆண்டுகளாக அவர்கள் இத்தகையப் பொருட்களை தயாரித்து உலகம் முழுவதும் தனக்கான சந்தையைப் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த கம்பெனியின் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் கல்நார் எனப்படும் பொருள் பல வருடங்களாக கலக்கப் படுவதாகப் புகார் எழுந்தது. கல்நார் எனப்படும் இந்தப் பொருளால் கர்பப்பை புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகிறது.

இந்த சர்ச்சையால், அமெரிக்கப் பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு கடந்த சில தினம்க்களில்  மட்டும் 4500 கோடி டாலர் அளவுக்குக் குறைந்துள்ளது. மேலும்,இந்நிறுவனத்தின் பங்குகளின் விலையும் 11 சதவீதம் சரிந்தது., இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு வழக்குகளை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் எதிர் கொண்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்