உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் நேற்றைய அரையிறுதி போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை குரேஷிய நாட்டின் அணி 2-1 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறையாக குரேஷிய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த வெற்றியை குரேஷிய மக்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். இதேபோல் முதல்முறையாக சாம்பியன் பட்டம் பெற வேண்டும் என்றும் குரேஷிய மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்த நிலையில் இந்த போட்டியை ரசித்து பார்ப்பதற்காகவே ரஷ்யா வந்திருந்த குரேஷிய நாட்டின் பெண் அதிபர் கொலிண்டா கிராபர்-கிட்டாரோவிச் போட்டி முடிவடைந்ததும் குரேஷிய வீரர்கள் மற்றம் பயிற்சியாளர்களை நேரில் சென்று பாராட்டினார். அதுமட்டுமின்றி வீரர்களின் அறைக்கு சென்று அவர்களுடன் ஆட்டம் போட்டு வெற்றியை கொண்டாடினார். இதுகுறித்த வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது
இந்த நிலையில் வரும் ஞாயிறு அன்று குரேஷிய அணி பிரான்ஸ் அணியுடன் இறுதி போட்டியில் மோதவுள்ளது. பிரான்ஸை வீழ்த்தி முதல்முறையாக உலகக்கோப்பையை குரேஷிய கைப்பற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Croatian president celebrating with the team after that win