பாகிஸ்தான் காவல் நிலையத்தில் தாலிபான்கள் தாக்குதல்!

வியாழன், 30 மார்ச் 2023 (21:02 IST)
பாகிஸ்தான் நாட்டில், காவல் நிலையத்தில்  நுழைந்து, தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள கைபர் பக்துன்க்வா மாகாணம் லக்கி மார்வாட் நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் இன்று அதிகாலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

அதிகாலை வேலை என்பதால், குறைவான போலீஸார் காவல் நிலையத்தில் இருந்தபோது, அங்கு நுழைந்த தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, மற்ற போலீஸாருக்குத் தகவல் அறிவிக்கப்பட்டு, உடனே கூடுதல் போலீஸார்  வாகனத்தில் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அந்த போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 4 பேர் பலியாகினர். காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீஸார் தேடி வரும் நிலையில், இந்த தாக்குதலுக்கு தெக்ரீக் –இ- தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஏற்கனவே பாகிஸ்தான் அரசாங்கத்துடன் இந்த பயங்கரவாத அமைப்பு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துள்ளதை மீறி இத்தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்