கொரோனாவோடு போகும் முக்கிய உணர்வுகள்? ஆய்வில் பகீர்!!

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (16:21 IST)
கொரோனா பாதித்தவர்களில் 67% பேருக்கு நுகரும் தன்மையும், சுவை அறியும் தன்மையும் போய்விட்டது என தெரியவந்துள்ளது. 
 
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் மாபெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது. மேலும் கொரோனா மருத்துவம் செய்த மருத்துவர்களுக்கும் கொரோனா தொற்று உண்டாகி வருகிறது.
 
இந்நிலையில், கொரோனா பாதித்த பலருக்கு சுவை மற்றும் நுகரும் தன்மை இழப்பு ஏற்பட்டுள்ளதாக லண்டன் மருத்துவர்களின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது பின்வருமாறு... 
 
லண்டன் Guy's மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் இத்தாலியை சேர்ந்த 202 கோரோனா நோயாளிகளிடம் தொலைபேசி மூலம் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். அப்போது 67% பேருக்கு நுகரும் தன்மையும், சுவை அறியும் தன்மையும் போய்விட்டது என்பதனை தெரிந்துக்கொண்டு உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்