சீனாவில் 60 சதவீதம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (19:53 IST)
சீனாவில் 60 சதவீத மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட அடுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அடுத்த 90 நாட்களில் அதாவது மூன்று மாதங்களில் 60 சதவிகித சீன மக்கள் கொரோனாவால் பாதிக்கப் படுவார்கள் என்றும் இது உலக மக்கள் தொகையில் 10% என்றும் ஆய்வு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
சீன மருத்துவமனையில் தற்போது பிணங்கள் நிரம்பி வழிவதால் சுமார் 2000 பிணங்கள் குவிந்து கிடப்பதாகவும் கூறப்படுகிறது. சீனாவின் நிலைமை மிக மோசமாகியுள்ளதால்  2020 ஆம் ஆண்டு நிலைமை மீண்டும் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்