கடந்த ஆண்டு உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா பல ஏவுகணை சோதனைகளை நடத்தியது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.
இந்த சந்திப்பில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அமெரிக்காவின் பேச்சிற்கு இணங்கி வடகொரியா அணு ஆயுதங்களை அழிக்க முடிவு செய்தது. ஆனால், தற்போது தென்கொரியா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் மீது கிம் நம்பகத்தன்மை இல்லமால் இருக்கிறார். டிரம்பின் பதவிக்காலம் முடிவதற்குள் வடகொரியா அதன் அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஆனால், கிம் தரப்போ அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து தவறாக ஏதும் கூறவில்லை என்று கூறியிருக்கிறார்.