சீனாவுடன் WHO-வும் கூட்டு... மர்மங்களை உடைக்கும் லி மெங் யான்!!

வியாழன், 24 செப்டம்பர் 2020 (11:59 IST)
உலக சுகாதார அமைப்பு, சீன அரசாங்கம் கோவிட்-19 பரவுவதைப் பற்றி அறிந்திருந்தது என லி மெங் யான் தெரிவித்துள்ளார். 
 
கொரோனா வைரஸின் பிறப்பிடம் சீனாதான் என்றும் சீனாதான் உலகம் முழுவதும் கொரோனா வைரஸை பரப்பியது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில் சீனர்கள் தான் கொரோனா வைரஸை தாங்களாகவே உற்பத்தி செய்தார்கள் என்ற தகவல் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
சீனாவில் உள்ள லேப் ஒன்றில் தான் கொரோனா வைரஸ் உற்பத்தியானது என்று அந்த லேபின் ஆய்வாளர் டாக்டர் லி மெங் யான் என்பவர் சமீபத்தில் தனது டுவிட்டரில் கூறியிருந்தார். இந்த உண்மையை லி மெங் யான் தனது ட்விட்டர் கணக்கில் கூறியதை அடுத்து டுவிட்டரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற வைராலஜிஸ்ட் லி மெங் யான், தற்போது ஒரு நேர்காணலில், சீன அரசாங்கம் கோவிட்-19 பரவுவதைப் பற்றி அறிந்திருப்பதாகவும், உலக சுகாதார அமைப்பு அதை மூடிமறைப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஏற்கனவே அமெரிக்கா உலக சுகாதார அமைப்பு மீது குற்றம்சாட்டி வந்த நிலையில் லி மெங் யானும் தற்போது அதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்