ஃப்ராடு ஃபாமிலி... ஒரே மாதத்தில் 23 மேரேஜ் + டிவோர்ஸ்!!

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (14:56 IST)
அரசு தரும் வீட்டை பெற சீனாவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மாற்றி மாற்றி 23 திருமணங்கள் செய்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் மேம்பாட்டுக்காக வீடுகள் இடிக்கப்பட்ட போது, அங்கு வீடுகளை இழந்தோருக்கு அரசு மாற்று வீடுகளை கட்டித்தருவதாக அறிவித்தது. எனவே அரசிடம் இருந்து வீடு பெற ஒரு கும்பமபே ஃப்ராடுதனத்தில் ஈடுப்பட்டுள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. 
 
ஆம், வீட்டை இழந்த ஷி என்னும் பெண், புது வீடு பெற திருமண ஆவணங்கள் தேவைப்படதால் தனது முன்னாள் கணவர் பானை மீண்டும் திருமணம் செய்துக்கொண்டு, அடுத்த 6 நாட்களில் வீட்டிற்கான சான்றிதழ் வந்ததும் விவாகரத்தும் செய்தார். 
 
ஆனால் பான் சும்மா இல்லாமல், அடுத்த 15 நாட்களுக்குள் தனது மைத்துனியையும் அவரது சகோதரியையும் அடுத்தடுத்து திருமணம் செய்து விவாகரத்து செய்தார். இதேபோல்தான் ஷீயும், மற்றொரு முன்னாள் கணவரையும் திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார். 
 
இப்படியே அண்ணன், தங்கை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர், 23 முறை திருமணம் செய்து விவகாரத்து பெற்றுள்ளனர். இந்த செய்தி தற்போது அரசுக்கு தெரியவந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்