மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளும் இந்தியா : ஐ.நா தகவல்..!

புதன், 19 ஏப்ரல் 2023 (13:20 IST)
மக்கள் தொகையில் இந்த ஆண்டுக்குள் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்து விடும் என ஐநா தகவல் தெரிவித்துள்ளது. 
 
உலக மக்கள் தொகை குறித்த அறிக்கையை மக்கள் தொகை நிதியம் சமீபத்தில் வெளியிட்டது. அதில் இந்த ஆண்டு சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளும் என்றும் இந்திய மக்கள் தொகையை 142.86 கோடியாக இருக்கும் என்றும் ஆனால் சீன மக்கள் தொகை 142.57 கோடியாக தான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
 
மேலும் இந்தியா சீனாவை அடுத்து மூன்றாவது இடத்தில் அமெரிக்காவின் மக்கள் தொகை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதியில் உலக மக்கள் தொகை 840.50 கோடியாக இருக்கும் என்றும் உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் இந்தியா மற்றும் சீனாவில் இருக்கின்றனர் என்றும்  தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்