விண்வெளியில் ''தியான்ஹே ஆய்வுக் கூடம் ''நிறுவ சீனா முனைப்பு!

செவ்வாய், 1 நவம்பர் 2022 (21:35 IST)
உலகில் மிகப்பெரிய பொருளாதார வல்லரசான  அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உள்ள சீனா  விண்வெளி ஆய்வுக் கூட அமைப்பை நிறுவியுள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்து சீனா பொருளாதாரத்தில்  மிகப்பெரிய நாடாக உள்ளது.  அமெரிக்காவின் நாசா விண்வெலி ஆய்வு மையம் எப்படி விண்வெளி ஆய்விலும், சந்திரன், உள்ளிட்ட கோள்களின் மீது ஆய்வு செய்து, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி வருகிறதோ அதேபோல், சீனாவும் விண்வெளி ஆய்வில்  ஈடுபட்டு வருகிறது.

அதன்படி, சீனா’ தியான்ஹே’ என்ற பெயரில் புதிய விண்வெளி ஆய்வுமையத்தை அமைத்து, இந்த ஆண்டின் இறுதிக்கு அதைப் பயன்பாட்டிற்குக்கொண்டுவரும் முடிவெடுத்துள்ளது.

மேலும், இந்த ஆய்வு மையத்தில், சீன விண்வெளி வீரர்கள், சென்று ஆய்வுப் பணிகள் ஈடுபடவுள்ளனர்.

இந்த நிலையில்,  நேற்று, இந்த தியான்ஹே ஆய்வுக் கூடப் பணிக்காக, ஏற்கனவே சீனா வெண்டியன் ஆய்வுகூட அமைப்பை விண்ணுக்கு அனுப்பிய நிலையில் அதனுடன் இணைந்தது.

இதையடுத்து நேற்று சீனா இரண்டாவது ஆய்வுக் கூட அமைப்பை வெற்றிகரமாக அனுப்பியுள்ளது. இத மூலம் புவயீர்ப்பு விசை, அறிவியல் ஆகியவற்றிக்கு சோதனை மேற்கொள்ள இது உதவும் என்ற தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்