உலக பணக்கார நாடு: அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடம்!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (10:04 IST)
உலகின் பணக்கார நாடாக இருந்த அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தை பிடித்துள்ளது என செய்தி வெளியாகியுள்ளது. 

 
கடந்த 2000 ஆம் ஆண்டு சீனாவின் சொத்து மதிப்பு 7 லட்சம் கோடி டாலராக இருந்தது. தற்போது 2020 ஆம் ஆண்டு சீனாவின் சொத்து மதிப்பு 120 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா உலகின் பெரும்பணக்கார நாடாக மாறியுள்ளது. இந்த தகவலை ஸ்விட்சர்லாந்தில் உள்ள மெக்கன்சி குளோபல் நிறுவனம் ஆய்வறிக்கையின்படி வெளியிட்டுள்ளது. 
 
மேலும் சீனா, அமெரிக்காவை தொடர்ந்து ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், மெக்சிகோ, ஸ்வீடன் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மேலும் உலகின்மொத்த வருமானத்தில் 60 சதவீதத்துக்கும் மேல் 10 நாடுகளுக்கு மட்டுமே சொந்தமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்