’’பிள்ளையைக் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடும் சீனா’’... ஏன் தெரியுமா ?

Webdunia
திங்கள், 30 மார்ச் 2020 (22:19 IST)
கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ளது.  இந்த கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 752241 பேர் பாதிப்பட்டுள்ளனர்.35388 பேர் உயிரிழந்துள்ளனர். 158688 பேர் குணமடைந்துள்ளனர்.இந்தியாவில்  1071 பேர் பாதிப்பட்டுள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில், உழைப்பிற்குப் பெயர்பெற்ற சீனர்கள், தற்போது, கொரோனா தடுப்புக்கான முகக்கவசம் தயார் செய்வதில் ஈடுபட்டனர்.

உலகம் முழுவதும் N95 ரக முகக்கவசத்தின் தேவை பலமடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் ,இந்த நோய் தொற்று தொடங்கிய சீனாவில் தற்போது இயல்பு திரும்பியுள்ளது. அதனால் சுமார் 8950 புதிய நிறுவனங்கள் முகக் கவச உற்பத்திக்காக தொடங்கியுள்ளது. இங்கு ஒரு நாளைக்கு 11.6 கோடி முகக் கவசங்கள்  தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிலர் சீனாவில் இருந்துதான் இந்த கொரோனா தொற்றூ பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ளதால் சீனர்கள் பிள்ளையைக்  கிள்ளை தொட்டிலையும் ஆட்டுவிடுகிறது என்கின்றனர் என தெரிவித்துவருகின்றனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸை சீனா வைரஸ் என்று குற்றம்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்