சீனாவின் சான்க்விங்க் நகரின் பரபரப்பான சாலையில், பெண் ஒருவர் தன் மகனுடன் நடைபாதையில் சாலையைக் கடந்து செல்கிறார். அப்போது சிக்னலைக் கவனிக்காமல் வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக கார் ஒன்று அந்த பெண்ணின் மேல் மோதுகிறது. இதில் நிலைகுலைந்து அந்த பெண் கீழே விழ சிறுவன் தன் தாயருகில் சென்று அவருக்கு என்ன ஆனது எனப் பார்க்கிறான். அவருக்கு அடி எதுவும் படவில்லை என்பதைத் தெரிந்து கொண்ட பின்னர் கோபமாக சாலையில் நிற்கும் காரை எட்டி உதைக்கிறான்.