அவசரத்துக்கு நூடுல்ஸ் கூட கிடைக்கல..! சீனாவில் கொரோனா! – முடங்கிய மக்கள்!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (10:55 IST)
சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பால் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களில் வெகுவாக குறைந்திருந்த நிலையில் பல நாடுகளும் ஊரடங்கை தளர்த்தி இயல்பு நிலைக்கு திரும்பி வந்தன. இந்நிலையில் தற்போது மீண்டும் உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவ தொடங்கியுள்ளது.

சீனாவில் கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவிற்கு மீண்டும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றது. இதனால் சீனாவின் ஷான்சி மாகாணத்தில் தலைநகர் உள்பட பல பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு ஒருமுறை மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் வெளியே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் பல சூப்பர்மார்க்கெட்டுகளும் கிட்டத்தட்ட காலியாக இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். பலர் அவசரத்திற்கு நூடுல்ஸ் கூட கிடைப்பதில்லை என வேதனை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்