பேருந்தின் அடியில் 80 கிமீ தொங்கிக்கொண்டே பயணம் செய்த சிறுவர்கள்!!

செவ்வாய், 28 நவம்பர் 2017 (21:40 IST)
சீனாவில் இரண்டு சிறுவர்கள் தங்களது பெற்றோர்களை காண பேருந்தின் அடியில் 80 கிமீ தொங்கிக்கொண்டே பயணம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சீனாவில் தென் குவாங்ஸி பகுதியில் மிகவும் ஏழ்மையான கிராமங்கள் உள்ளன. அங்கு வாழும் மக்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை காப்பாற்ற குவாங்டங் மாகாணத்துக்கு சென்று பணிபுரிகின்றனர்.
 
இந்நிலையில் குவாங்ஸி பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் தங்களது தாய், தந்தையை பார்க்க பள்ளியில் இருந்து வெளியேறினர். பேருந்தில் பயணம் செய்ய பணம் இல்லாததால் பேருந்தின் அடியில் இருந்த பெட்டி போன்ற பகுதியில் அமர்ந்து பயணம் செய்தனர். 
 
இதுபோன்று அவர்கள் 80 கிமீ பயணம் செய்துள்ளனர். ஒரு பேருந்து நிறுத்தத்தில், பேருந்து நின்ற போதுதான் ஊழிர்கள் பேருந்தின் அடியில் சிறுவர்கள் உள்ளதை கண்டுள்ளனர். பின்னர் மீட்கப்பட்ட சிறுவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்