இதுக்கு இல்லையா ஒரு எண்டு.. அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு!

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (10:49 IST)
அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில காலமாக தொடர்ந்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. பெரும்பாலும் இந்த திடீர் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் இளைஞர்கள் ஈடுபடுவதால் இளைஞர்களுக்கு துப்பாக்கி வழங்க பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்படுத்த பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் சுதந்திர தின அணிவகுப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கிரிமோ என்ற 22 வயது இளைஞரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்