அவர் கூறும் போது, நான் இவர்களுக்கு ஒரு குழந்தையை மட்டும் உருவாக்கவில்லை, நன் ஒரு பாரம்பரியத்தையே உருவாக்குகிறேன். குழந்தையை பிறருக்கு கொடுக்கிறாயா என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். இது ஒன்றும் என் குழந்தை இல்லை கருமுட்டையும், விந்தணுவும் சேர்ந்த தருணம் முதலே இது அவர்களின் குழந்தை . நான் ஒரு குழந்தைக்கு காவல் இருப்பது போலவே உணர்கிறேன்.
கனடாவில் பணம் வாங்கும் வாடகைத் தாய் முறை சட்டவிரோதமானது. அமெரிக்காவில் வாடகை தாய் கருவை சுமக்க 60,000 - 1,20 ,000 டாலர் பணம் பெறுவார்கள் . கனடாவில் நாங்கள் அப்படி செய்யவில்லை . நான் ஒன்றும் குழந்தை பெரும் இயந்திரம் இல்லையே என புன்னகைத்தபடி சொல்கிறார் மரிசா .