டெல்லியில், புதிய கல்விக் கொள்கை, யுஜிசியின் புதிய கட்டுப்பாடுகள், வினாத்தாள் கசிவு போன்றவற்றுக்கு எதிராக இந்திய தேசிய மாணவர் சங்கம் இன்று போராட்டம் நடத்தியது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ராகுல் காந்தி, "இந்தியாவின் கல்வி அமைப்பை ஆர்எஸ்எஸ் கைப்பற்ற முயற்சி செய்கிறது. கல்வி முறை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றால், நாட்டின் எதிர்காலம் இருட்டடிக்கப்படும். வேலைவாய்ப்புகளும் முற்றிலும் அழிந்து போகும்.
நாட்டின் மிகப்பெரிய பிரச்சனை வேலைவாய்ப்பின்மையே. ஆனால் பிரதமர் மோடி இதைக் குறித்து பேசுவதற்குப் பதிலாக, சில நாட்களுக்கு முன் கும்பமேளா பற்றிய பேச்சுக்களில் மும்மரமாக இருந்தார். வேலைவாய்ப்பு பற்றியே அவர் கவனம் செலுத்த வேண்டும்.
பாஜக - ஆர்எஸ்எஸ் கூட்டணி நாட்டின் வளங்களை, குறிப்பாக அம்பானி, அதானி போன்ற கோடீஸ்வரர்களின் வசம் கொண்டு சேர்க்கும் திட்டத்தில்தான் ஈடுபட்டுள்ளது. இதைத் தடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டியது அவசியமாகிறது" என்று கூறினார்.