ரஷ்யாவின் கடல் எல்லையில் பிரிட்டிஷ் கப்பல்கள் குறுக்கிடுவதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருங்கடலில் ரஷ்யாவில் எல்லைக்குட்பட்ட பிராந்தியத்திற்குள் பிரிட்டிஷ் கப்பல்கள் நுழைவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் சமீபத்திய கப்பல் குறுக்கீடு பிரச்சினையில் பேசிய ரஷ்யா இதற்கு மேல் தங்களது பிராந்தியத்தில் பிரிட்டிஷ் கப்பல்கள் அத்துமீறினால் குண்டு தாக்குதல் நடத்த முடிவெடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் தரப்பில் பேசிய அதிகாரிகள் ரஷ்யா எல்லையில் அத்துமீற பிரிட்டிஷ் கப்பல்களுக்கு முகாந்திரம் இல்லையென்றும், ரஷ்ய எல்லைக்குள் நுழைந்ததாக ரஷ்யா ரேடியே சமிக்ஞையோ, புகை குண்டு எச்சரிக்கையோ கூட விடுக்காததாகவும் கூறப்படுகிறது. இதனால் கருங்கடல் பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.