பல நூற்றாண்டு பிரச்சனையை தீர்க்கும் ஒற்றை பாலம்

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2019 (19:40 IST)
மேற்கு ஆப்பிரிக்காவில் காம்பியா நதி மீது கட்டப்பட்டுள்ள புதிய பாலம் பல தசாப்தங்களாக இருந்து வந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சனையை நீக்குவதோடு, வணிகத்தையும் பெருக்கவுள்ளது.
 
நதியின் இரு பக்கங்களிலும் இருக்கும் நிலம் காம்பியா. செனிகர் நாட்டின் மூன்று பக்கங்களையும் இந்த நதியே சூழ்ந்துள்ளது. இரண்டு பக்கங்களிலும் இருக்கும் காம்பியா நாட்டை இந்த பாலம் இணைப்பதோடு, செனிகலின் வடக்கு பகுதியில் இருந்து தென் செனிகல் மாகாணத்தையும் இந்த 1.9 கிலோ மீட்டர் பாலம் இணைக்கிறது.
 
தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த புதிய பாலத்தில் கார் போன்ற வாகனங்கள் செல்ல 5 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படும். லாரி போன்ற பிற கனரக வாகனங்கள் வரும் ஜூலை மாதம் முதல் இதில் செல்லலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்