சுடுகாடுகளில் இடமில்லை: பிணங்களை தோண்டி புது பிணங்களை புதைக்கும் அவலம்

திங்கள், 15 ஜூன் 2020 (11:24 IST)
பிரேசிலில் சுகாடுகளில் இடம் இல்லாத காரணத்தால் புதைக்கப்பட்ட பிணங்களை தோண்டி எடுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 
 
உலக அளவிலான கொரோனா பாதிப்பு 80 லட்சம் பேரை தாக்கியுள்ளது. இதில் அதிகபட்ச பாதிப்பு அமெரிக்காவில் உள்ளது. இதனையடுத்து பிரேசிலும் அதிக பாதிப்பு உடைய நாடாக உள்ளது. 
 
இந்நிலையில் பிரேசிலில் அதிக மரணங்களும் பதிவு செய்யப்படுவதால் அங்கு பல இடங்களில் இடுகாடுகளில் இடம்போதாமல் 3 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்தவர்களை தோண்டி எடுத்து அப்புறப்படுத்திவிட்டு கொரோனாவால் இறந்தவர்களை புதைக்கும் அவலநிலையில் தற்போது உருவாகி உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்